புத்தன் யார்

போதி மரத்தடியில் புத்தன்
அமர்ந்த நிலையில் , மூடிய
கண்கள், கைகளிரண்டும்
இணைந்து கணுக்கால் மீது
முகத்தில் அமைதி ………
த்யானத்தில் அமர்ந்த அவர்
கண்டதுதான் என்ன …..
புறக் கண்கள் மூட
அகக் கண்கள் திறக்க
கவுதமன் 'புத்தன்' ஆனார்
அந்நாள்வரை புறக்கண் காட்டிய
காட்சிகள் அத்தனையும் காணாமல் போய்
'சூனியமானது' புரிந்து கொண்டான்
கவுதமன் , வாழ்க்கை நிலையற்றது
நாம் காணும் அத்தனையும்
சுக துக்கங்கள் எல்லாம்
மாயையே …… உண்மைதான்
நிரந்தர சுகம் என்பதே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (25-May-19, 1:30 pm)
Tanglish : butthan yaar
பார்வை : 81

மேலே