காதல்

நீ இல்லா என் மனம்
மசி இல்லாத
எழுது கலம்போலானது
மசி இல்லா கலத்தைக்
கொண்டு எழுதினாலும்
எழுத்தொன்றும் பதியாது
நீ வந்து என்னுள்ளத்தில்
புகுந்து விட எழுது கலத்தில்
மசி புகுந்துவிட்டதுபோல்
என்னுள்ளத்தில் காதல்
இன்பம் எழுத்துக்கள்போல்
பதிவாவதை உணர்ந்தேனே நான்
எழுத்துக்கள் ஓவியமாய் உந்தன்
அழகிய உருவெடுத்து பதிய

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (26-May-19, 10:25 am)
பார்வை : 257

மேலே