பாடுபட்ட நெஞ்சம்

உதைப்பட்டு நெஞ்சம் புண்ணானது
உள்ளமும் அதனால் வலுவிழந்தது
உண்டான கனவு வெறும் உமியானது

கனவென்ற ஒன்றுக் கைக்கூடுமோ
கடைப்பிடிக்கும் முயற்சி விடைக் கூறுமோ
பதறுகின்ற நெஞ்சம் மகிழ்வாகுமோ

அகலாமல் நினைவு அரிக்கின்றது
ஆயிரந் துன்பத்தை விதைக்கின்றது
இதமான நிலையோ பறக்கின்றது

பாதைகள் எல்லாம் சிதைந்ததைப் போல்
பார்வையும் எதையோ வெறிக்கின்றது
பட்டென்று துன்பம் மாறுவதற்கு
பாடுபட்ட நெஞ்சம் தவிக்கின்றது
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (27-May-19, 1:16 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 38
மேலே