காதல் கடிதம் 1
காதல் தேவதை
அன்பே
என்னைக் கண்டதும்
ஆயுதம் எடுக்கும்
ஆயுத எழுத்து
அக் நீ
நீ இல்லை என்றால்
என் உயிரை விருந்தாக்கும்
அக்னி
உன் கூடு
ஊன் கூடு அல்ல
தண்ணீர்த் தொட்டியில்
தனியாத் தொங்கி
தணியாத தாகம் தரும்
தேன்கூடு
அன்பே நீ
நீட்டுப் போட்டு வை
தமிழகத்தில் யாரும்
நீட்டு வேண்டாம்
என போராடமாட்டார்
பல்கலைக்கழகத்தில்
சேர வரிசையில்
நின்றவர்கள்
இந்த மானின்
பல் வரிசையைக்
கண்டதும்
மாணவர்களாய் மாறினர்
உன்னை வெயிலுக்கு
காட்டாமல் வேண்டுமானால்
வளர்த்திருக்கலாம்
நிச்சயம்
மயிலுக்கு காட்டியிருப்பார்கள்
உன் மையலை
உன் கண்ணீர்த்துளிகள்
கதறி அழுகின்றன
உன்னை விட்டுப் பிரிந்ததால்
நீ
இருவர் மட்டுமே
சேர்ந்து கட்டிய புது கோட்டை
நீ விரும்பும்
ஒருவன் இருப்பதோ
செங்கோட்டை
மற்றவர்கள் இருப்பதோ
பாளையங்கோட்டை
நீ உம் என்றால்
கிளியோடு வாழ்க்கை
இல்லை என்றால்
கிலியோடும் களியோடும்
வாழ்க்கை
எனக்குப் பிடிக்காத தோஷம்
உனக்குப் பிடித்திருக்கும்
ஜலதோஷம்
இந்திய தேசத்தில் வாழ்வதைவிட
உன் இதய நேசத்தில்
வாழ்வதே பெருமை