ஈரமான மழை,

இந்த பெரும் மழையும்
நினைவு தடயங்களை
அழிக்க இயலாது
அழுதே தீர்க்கிறது,

காட்டிக்கொடுக்கும்
மின்னல் கடுகடுக்கிறது
இடித்துக்காட்டி
இன்னுமா
முடியவில்லை என்றே,

நினைவுகளை,
கழுவி சுத்தமாக்கி
ஈரமாக்கி
முளைக்க விட்டதை
தவிர,
இந்த மழைக்கு
அழிக்க மனமில்லை
ஈரமானது மழையும்.

எழுதியவர் : இயற்கை (28-May-19, 8:44 am)
சேர்த்தது : சபிரம்சபீரா
பார்வை : 44

மேலே