காதலன் மடல்
என்னை நீ பார்த்தபோது
உன் கண்ணுக்குள் என்னைப்
பார்த்த நான் என் இதயத்தையும்
அல்லவா கண்டேனாங்கு-இப்படி
என்மீது கொண்ட காதலை
உந்தன் கண்ணிலே பூட்டிவைத்திருக்கும் நீ
உன் செவ்விதழ் திறந்து இன்னும் ஏன்
' அன்பே நீதான் என் காதலன்'என்று
கூறிட தயங்குகின்றாயோ ….
இன்னும் ஏனடி நாணம் கண்ணும்
மனமும் ஒப்புதல் தந்த பின்னும்
இப்படிக்கு நான் உன் காதல் வேணும்
நான் எழுதி அனுப்பும் மடல்
இந்த மடலுக்கு பதில் தருவாயா
எழுத்திற்கு ஏதடி பெண்ணே நாணம்