என் விழிகளில் கண்ணீர் மழை 555

உயிரானவளே...
அந்தி சாயும் வேலை
கார்மேகத்தை
பார்த்து கொண்டே...
என்னிடம் பலமுறை
கேட்டு இருக்கிறாய்...
மேகம் எப்போ
மழையாக பொழியும்...
நாம் சேர்ந்து
நனைய
ஆசை என்றாய்...
நீ சொன்ன போதெல்லாம்
மழை பொழியவில்லை...
நீ என்னை
பிரிந்த
நாள் முதல்...
இப்போதெல்லாம் தினம் தினம்
பலமுறை மழையாக பொழிகிறது...
என் விழிகளில்
கண்ணீர் மழை...
என்
உயிரானவளே நீ வா...
என் கண்ணீர் மழையில்
ஆனந்தமாக
நீ நனைந்து செல்.....