காதல்

சந்தனக் காட்டில் நீந்திவந்த தென்றல்
அந்தி மயங்கும் இனிய வேளையில்
என்னைவந்து தொட்டது சந்தனம்
மணம் பரப்பி அப்பொழுது பின்னிருந்து
அழகிய நீண்ட மெல்லிய கை விரல்கள்
என் கண்களை மூட கண்டுகொண்டேன்
கள்ளியவள் கைதான் என்று அது வீசிய
அன்றரைத்து அவள் முகத்தில் பூசிய
கஸ்தூரி மஞ்சள் பரிமளம் என்நாசியைத்துளைக்க
இன்னும் என்ன பெண்ணே முன்னே
வந்து நில்லடி என்றேன் , மெல்ல நகைத்து
என் முன்னே நின்றாள் என் காதலி
அள்ளி அணைத்தேன் அல்லிக்கொடியை
வீசும் பரிமளத்தில் என்னையே மறந்தேன்
காதல் எம்மை ஆட்கொள்ள

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (6-Jun-19, 11:26 am)
Tanglish : kaadhal
பார்வை : 241

மேலே