நண்பர்கள் உரையாடல்

கார்த்திக் ,,,, டேய் மதன் நாம் பள்ளி விட்டு வீட்டுக்கு போகும் வழியில் அந்த வீட்டில் மாங்காய் பறிப்போமா /
மதன் ,,,,நமக்கு வேணாம் இந்த வம்பு ஆளை விடு .

கார்த்திக் ,,,, சீ நீயொரு பயந்தாங் கொள்ளி
மதன்,,,,, அப்படியில்லையடா எவருடைய பொருளும் நாம் திருடக் கூடாது

கார்த்திக் ,,,, நீ சொல்கிறதும் சரிதான்டா
மதன் ,,,,சரிதான் நான் அம்மா பிள்ளையடா.அம்மா எது நல்லது, எது தீயது என்று எனக்கு ஒவ்வொன்றும் சொல்லியே வளர்த்து வருகிறா ,

கார்த்திக் ,,,, உன்னைப் போல் அம்மா எனக்கு இல்லையடா .
மதன் ,,,,,, அப்படியொரு நாளும் சொல்லக் கூடாது , ஒவ்வொரு தாயும் நாம் கடவுளடா .

கார்த்திக்,,,,,, நீ எப்படி இவ்வளவு அறிவாக, அன்பாக பேசுகிறாய் /
மதன் ,,,,, இது எல்லாம் என் அம்மாவின் படிப்பினையே , இவ்வளவு கஷ்டத்திலும் எங்களை எவ்வளவு பொறுப்பாக வளர்த்து வருகிறார் என் தாய்.

கார்த்திக் ,,,,,அப்படியா/ எங்களுக்கு கஷ்டம் இல்லையடா மதன் ,, கேட்டதெல்லாம் வாங்கித்தர அப்பாவிடம் நிறையக் காசு இருக்கு ,
மதன் ,,,,,அதுதான் நல்லது ஆனால் நீயும் அதை உணர்ந்து கொள், அப்பா சுகத்துடன் இருக்கும் வரையில் நீ செல்லப் பிள்ளைதான் ,அதன் பின் நீ பொறுப்புடன் வாழவேண்டும் அல்லவா அதை சிந்தித்து நடந்து பார், நீ இன்று போல் என்றும் செழிப்புடன் வாழமுடியும் ,

கார்த்திக் ,,,,, டேய் மதன்/ உன்னை நான் என்னமோ என்று நினைத்தேன், ஆனால் நீயொரு உத்தமன் தானடா, உன்னை நண்பனாக கிடைத்தது நான் செய்த பாக்கியம் என்று கார்த்திக் சொல்ல
இருவரும் கட்டியணைத்து ஆனந்தக் கண்ணீர் சொரிந்தனர் ,
மதன் ,,,,உன்னிடம் பேசியது எனக்கு மன மகிழ்ச்சியாய் இருக்கடா அம்மா என்னை பார்த்துக் கொண்டே இருப்பா நான் போயிற்று வரேன் bye bye

இருவரும் மனம் நிறைவுடன் வீடு திரும்பினர்

எழுதியவர் : பாத்திமாமலர் (6-Jun-19, 11:59 am)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 1657

மேலே