சம்பிக்கப்பட்ட மாநிலம் எம் தமிழகம்
மழை மறுக்க வானம் பார்த்த பூமி
வறண்டுவிட்டது
விதைப்பவனின் கண்ணீர் துளி கண்டு
கருணை மழை பொழிந்துவிடாதா
கருமேகங்கள்
சபிக்கப்பட்ட மாநிலமாய்
எம் தமிழகம் - அழிவு திட்டங்களின்
பிடியில்
அனைத்து திட்டங்களையும் எதிர்ப்பவர்கள் - அல்ல
எம் தமிழ் மக்கள்
அழிவு திட்டங்களை எதிர்ப்பவர்கள்
அவர்கள் - நிகழ்வது யாருக்காக இருந்தாலும்
எதிர்த்து குரல் கொடுப்பவர்கள்
இன்று ஏனோ சமூக வலைத்தளங்களில்
மட்டுமே ஒலிக்கிறது - ஒருசிலரின்
குரல் மட்டுமே !!!!!
எம் இனமே எழுந்து வா
இது மாற்றத்திற்கான நேரம்!!!!