ஓ, மனமே

சித்தம் இனிக்க சிவமே செந்தமிழில் ஒரு பாட்டு சொல்லு,
கஷ்டங்கள் மறைந்திட ஹரனே சீர்மிகு சந்தம் சொல்லு,
இரும்பை கவரும் காந்தம் போலே மனதை கவரும் தேன் நிறை சொல்களை அமைத்து பாடு,
ஓ, மனமே! ஆனந்தக் கூத்தாடு.

மொழியில்லா சைகை மொழி பேசிடும் உள்ளங்களும் உய்த்து உணர்ந்து மகிழ்ந்திட கற்றவை நினைப்பிருக்க, கல்லாதவை அனைத்தும் உள்ளவாறு உணர்த்தும் மெய்ப்பொருளே!
சொன்னவை நல்லவையாக,
சொல்லாதவை அல்லாதவையாக,
விண்ணிறைந்த இருளில்,
கண் சிமிட்டும் ஒளியாய் தினமும் நீ வருவாய்,
காட்சியால் கண்கள் சிமிட்டி,
மௌனத்தால் பேசி நாளும் கழிந்த இரவை கூட்டி குறைத்துக் கூற எனக்கு ஞாபகமில்லை.

ஜென்மம் ஜென்மமாய் இரவைக் கழித்த உணர்வு உள்ளுரவே என்னை ஊக்குவிக்க உதயமான தூண்டுதலில் நான் உன்னை எழுதி சரணடைகிறேன் ஐயமேதுமின்றி.

காலம் காலமாய் கருணையின் ஆதாரமாய், அன்பே வடிவாகிய நீ, ஏன்டா மகனே! பணம் ஏதும் எனக்காய் சம்பாதித்தாயோ? என்று கேட்டதில்லை.
எதையும் எதிர்பார்த்ததில்லை.
அத்தகைய உனது செயலை எனதாக கிரகிக்க முயற்சிக்கிறேன், ஆனால் தடையாய் நிற்கிறது அழியும் இவ்வுடல்.
பண, செல்வம் சேர்ந்தால் நானும் மாறிவிடுவேனோ?
உன்னைப் போல் அல்லாது அதிகம் எதிர்பார்ப்பேனோ?

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (7-Jun-19, 12:14 am)
பார்வை : 2288

மேலே