பெண்மையின் தலையாய பண்பு பொறுமை

'பெண்மையின் தலையாய பண்பு - பொறுமை'

தன்னை தானே முதலில் மன்னித்து நேசித்து பிறர் உணர்வையும் நேசிக்கும் பெண்மை
அன்பின் இருப்பிடமாக;
பிற உயிர்களின் வலியை கண்டு தன் வலியாக எண்ணி துவண்டு போகும் மென்மையான பெண்மை
இரக்கத்தின் ஊற்றாக ;
மனதில் அஞ்சாமையுடன் தன் உணர்வுகளுக்கு உண்மையாக செயல்படும் வன்மையான பெண்மை
ஆளுமையில் தாயாக;
பூமாதேவியாய் எதையும் வைராகியமாய் காலத்தில் நம்பிக்கை வைத்து எதிர்காலத்தை எதிர்நோக்கும் பெண்மை
பொறுமையின் பிறப்பிடமாக இருக்க ;
அன்பு , இரக்கம் , ஆளுமை பெண்மையுடன் கூடிய இயல்பான பண்புகளாக மிளிர ;
பொறுமையெனும் பண்பானது மேற்கத்தேய கலாசார மோகத்தில் அனுபவ முதிர்ச்சியுடன் மட்டுமே
பெண்மையுடன் ஒட்டிக்கொண்டு பெண்மையை மேன்மைப்படுத்த;
பொறுமையே பெண்மையின் ஏனைய பண்புகளை மேலும் மெருகூட்டி பெண்மையை சிறப்பிக்க;
பொறுமையே பெண்மையின் தலையாய பண்பாகின்றது....!

~ நியதி ~

எழுதியவர் : நியதி (11-Jun-19, 9:02 pm)
பார்வை : 170

மேலே