சொந்தம்

சொந்தம்

மானுடம் கண்டு பிடித்த
அற்புதமான உறவுகள்
ஆனால்
இப்போதைய நிலைமை
உதட்டிலே போலியான உண்மை
உள்ளத்தில் அவ்வளவும் பொய்
பணமிருந்தால் பல் இளிக்கும்
பகட்டுக்கு தாளம் போடும்
கொஞ்சம் தாழ்ந்து விட்டால்
அடுத்த நிமிடமே ஓடி விடும்
நல்ல நல்ல பெயர்களுடன் உலா வந்து சொந்தங்கள்
காலபோக்கில் கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதை
பொறாமை என்ற நஞ்சு
ஆசை என்ற அரக்கன்
பணம் என்னும் விஷம்
ஆட்டி படைத்ததால்
கலகலத்து போன சொந்தங்கள்.
சுயநலம் பேய் உள்ளே இறங்கியதால்
சொந்தம் எல்லாம் சம்பரதாயம் .
இப்போது பிறக்கும் குழந்தைகளுக்கு
அம்மா, அப்பா மட்டும்
தான் சொந்தம்.
எதிர்வரும் நாட்களில்
இதை நிலைநிறத்துவதே
மிகவும் சிறமம்.

- பாலு.

எழுதியவர் : பாலு (14-Jun-19, 2:16 pm)
சேர்த்தது : balu
Tanglish : sontham
பார்வை : 256

மேலே