தோல்விகள்

ஆனந்தம்
சந்தோசம்
புன்னகை
மகிழ்ச்சி
வெற்றி
இன்பம்

தமிழில் எத்தனை வார்த்தைகள்
வாழ்வில் ஒன்றும் அருகில் இல்லையே...

முயற்சி என்ற ஒன்றை தூண்டிலிட்டும்

வலையில் அகப்படவில்லை
எதுவும்

நம்பிக்கையோடு
மீண்டும்
வலை விரித்து
காத்திருக்கிறேன்

தோல்வியே நீ ஒரு முறை தோற்று விடு..

எழுதியவர் : senthilprabhu (18-Jun-19, 10:56 pm)
சேர்த்தது : ப செந்தில்பிரபு
Tanglish : tholvigal
பார்வை : 492

மேலே