எவ்வேலை செய்தாலும்
முயன்று முயன்று பார்த்து விட்டேன்
முயற்சி என்னை விரட்டு தடா
அயரவில்லை சோரவில்லை
அல்லல் என்றும் குறையவில்லை
எவ்வேலை செய்தாலும் எதிர்க்க - ஒரு
எதிரிக் கூட்டம் அலையுதடா
சுழலுகின்ற பம்பரம் போல் - தினம்
சூழலும் மாறி கொல்லுதடா
பாய்மரக்கலத்தைப் போல் - நான்
படும்பாடு வெகு துன்பமடா
பல்வேறு துன்பம் எல்லாம் - என்னை
பலவானாய் மாற்றுதடா
சரியான காலத்திற்கு துணிவாக
காத்திருந்து தனியாக வெல்வேணடா.
--- நன்னாடன்.