தவிக்கின்ற எண்ணத்திற்கு
தடுமாறுதே மனது தருமாறுதே
தடம் மாறும் முன்னே அதைத் தடுத்தாகணும்
தவிக்கின்ற எண்ணத்திற்கு விடை கூறணும்
தடையாக வருகின்ற நிலை யாவையும்
தணிக்கின்ற வித்தையினை பயின்றாகணும்
பல நூறு பழமொழிகளை கற்றுத் தேறணும்
பலமோடு பலவேறு கலை கற்கணும்
படிக்கின்ற பலவற்றை பரிசோதித்து
பண்பான சிலவற்றை நிலையாக்கணும்
பகுத்தாகணும் பரிசுத்தமானதை வகுத்தாகணும்
கொடுத்தாலும் கொண்டாலும் நிறைகாணணும்
கொடுத்தவர் பெயருக்கு புகழ் சேர்க்கணும்
கொண்டவர் பெயரை நீ மறந்தாகணும்
வாழ்ந்து சென்றோர் சென்ற வழியில் நடந்தாகணும்
வாய்மையான வாழ்க்கை முறையில் வாழ்ந்தாகணும்.
--- நன்னாடன்.