பருவத்திற்கு பருவம்

உன் உருவம் என்ற உடம்பிற்கு
ஒவ்வொரு நாளும் தேர்விருக்கு
விரும்பும் வகையில் அது நடைபெறலாம்
வெறுப்பேற்றும் முறையில் இருந்திடலாம்

பருவத்திற்கு பருவம் வேறுபடலாம்
பல காலத்திற்கு நம்மை தொடர்ந்திடலாம்
தீரத்தோடே அதனைக் கையாண்டால்
திறமைப் பெற்றே அதனை வென்றிடலாம்

பிழையாய் சிலவற்றைக் கையாண்டால்
பிடிநழுவிய கண்ணாடியாய் உடைந்திடுவாய்
புது புது செயலினுள் புகுந்துவிட்டால்
போராடும் குணத்தை நீ பெற வேண்டும்

அல்லும் பகலும் அனைத்து காலமும்
வெல்லும் எண்ணத்தோடே நடமாடணும்
சொல்லும் செயலும் நேர்பாதையில்
சென்றால் எதனிலும் புலமைப் பெறலாம்.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (25-Jun-19, 7:41 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 84

மேலே