கடைக்குட்டி

துல்லி துல்லி விளையாடி,
வீட்டை சுற்றும் மான் குட்டி.!
எல்லோருக்கும் செல்லம் அவள்,
எங்கள் வீட்டு கடைக்குட்டி..!!

மண்ணில் விளைந்த மாணிக்கம்,
இவள் கடவுள் கொடுத்த சௌபாக்கியம்,!
கண்ணில் வைத்து பார்திருப்பேன்,
தேவதை அவளை காத்திருப்பேன்..!!

ஒரு நொடியில் எங்கொ மறைந்திடுவாள்,
என்னை கொஞ்சம் சுற்றவைப்பாள்.!
பின்னால் இருந்து பயம் காட்டி,
கன்னத்தில் மெல்ல முத்தம் வைப்பாள்..!!

சடையை பிடித்து நான் இழுத்தால்,
தலையில் கொட்டிட்டு ஓடிடுவாள்.!
ஓடி பிடித்து விளையாடி,
சண்டை போட என்னை கூப்பிடுவாள்..!!

மொட்டை மாடியில் சோறூட்ட,
போதும் என்று அடம் பிடிப்பாள்.!
நிலவை காட்டி ஏமாற்றி,
இன்னொரு பிடிசோற் ஊட்டிடுவேன்..!!

கண்கள் சுறுங்கும் நேரம் பார்த்து,
மடியில் மெல்ல சாய்த்துகொள்வேன்.!
கண்ணே முத்தேன்னு தாலாட்டி,
பாட்டு பாடி தூங்க வைப்பேன்..!!

எழுதியவர் : சீனு (20-Jun-19, 12:37 pm)
சேர்த்தது : சீனு
பார்வை : 8526

மேலே