கண்ணதாசன் காப்பு

தமிழ் கண்டத்தில் நீ ஒரு கோள மதி
தமிழில் காவியம் படைத்த தெள்ளு கவி
மடையரை மாற்றினாய் நல்லவழி
மயக்கும் பாடலின் துள்ளல் படி

அணி அணியாய் தந்தாய் பாடல் கோடி
அனைத்திலும் கருத்தை நுழைத்த படி
உழைத்தோர் வந்தனர் உன் பாடல் தேடி
உண்மையாய் மகிழ்ந்தனர் ஆடி பாடி

தமிழ் வந்தது அமர்ந்தது உன் சிந்தை நாடி
சிந்துக்கள் படைத்தாய் உன் சிந்தனைப் படி
பலருக்கு புத்தியை கொடுத்தாய் பாடல் வழி
பாமரருக்கு ஆனாய் நீ நவீன ஓலைச்சுவடி
- - -நன்னாடன்

எழுதியவர் : நன்னாடன் (20-Jun-19, 8:15 pm)
சேர்த்தது : நன்னாடன்
Tanglish : kannadhaasan kappu
பார்வை : 166

மேலே