கோபுரமாயுயர்த்திடுமே

விரும்பின வெல்லாம் கிடைத்திடு மாயின்
வெற்றியின் சுவைதெரிந் திடுமோ?
இருப்பதைக் கொண்டு மனநிறை வுற்றால்
இன்பமுன் கைகளில் தவழும்!
வருந்துய ரெண்ணி உளங்கலங் காமல்
வருவதைத் துணிவுடன் எதிர்கொள்!
குருவரு ளொன்றே நற்றுணை யாகிக்
கோபுர மாயுயர்த் திடுமே!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (20-Jun-19, 3:42 pm)
சேர்த்தது : Shyamala Rajasekar
பார்வை : 61

மேலே