ஒரே கருத்தில் அமைந்த தமிழ் திரை இசை பாடல்கள் - 002
தமிழ் திரை இசை பாடல்கள் சில ஒரே மாதிரியான கருத்தோட அமைஞ்சுடுது
இதை திருட்டுனு சொல்ல முடியாது , ஆனா இந்த ஒற்றுமையை நீங்க கவனிக்காம போய் , இப்ப இத வாசிக்கிறது மூலமா கவனிக்குறீங்கனா அது ஒரு தனி அனுபவமா அமையும்னு நம்புறேன்.
அந்த காரணத்துக்காக எனக்கு தெரிஞ்ச பாடல்களை தொகுத்து எழுதி இருக்குறேன்.
உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுகுறேன் , நன்றி
பாடல்1 : அக்கம் பக்கம் யாரும் இல்ல பூலோகம் வேண்டும்
படம் : கிரீடம்
அக்கம் பக்கம் யாரும் இல்லா, பூலோகம் வேண்டும்
அந்தி பகல் உன் அருகே , நான் வாழ வேண்டும்
---------------------------------------------------------------------------------------------------
பாடல்2 : பார்த்த முதல் நாளே
படம் : வேட்டையாடு விளையாடு
யாரும் மானிடரே இல்லாத இடத்தில் சிறு வீடு கட்டி கொள்ள தோன்றும்
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை மரம் தோறும் செதுக்கிட வேண்டும்
----------------------------------------------------------------------------------------------------------------
பாடல்3 : உனக்காகவே உயிர் வாழ்கிறேன்
படம் : மூன்று பேர் மூன்று காதல்
மலை ஓரத்தில் ஒரு மரத்தடி
அங்குச் சின்னதாய் ஒரு வீடடி
சுற்றி எங்கிலும் தனிமை
உன் ஈரக் கூந்தல்
என் மீது மோத வேண்டுமே
உன் மேனி வாசம்
என் ஆவல் திண்ட வேண்டுமே
இந்த பாடல்கள் எல்லாமே , காதலனும் காதலியும் தனியா யாரோட தொந்தரவும் இல்லாம வாழலாம் , அப்படீன்னு சொல்ற மாதிரி இருக்குது. எல்லாமே ஒரே கருத்துதான் அப்படீன்னு எனக்கு படுது. உங்களுக்கு?