தங்கத்தமிழே

விடியலை நோக்கி அழகிய குழந்தை
ஆளத் துடிக்கின்றான் அழுகின்றான்
தமிழ் தாயின் அணைப்பில் சுகம்
அள்ளி அள்ளி பருகுகின்றான்.
வீராதி வீரமும் வேங்கையின் சீற்றமும்
மெல்ல மெல்ல அவனிடம் வளர்கின்றது
அவன் நினைத்தானோ என்னமோ /
அவன் கைகளில் தமிழ் தவழத் தொடங்கியது.
பச்சிளம் பாலன் பகுத்தறிவு மிக்க தமிழனாக வளர்ந்தான்
சரித்திரங்கள் என்ன சொல்கின்றது என ஆராய்ந்தான்
தமிழனுக்கு ஏன் இந்த அடிமை சாசனம்
கிழித்தெறிந்தான்
,தமிழுக்கு தமிழன் மட்டுமே
தமிழனுக்கோர் அழகிய ஈழமென்றோரு பெயருடன்
தமிழ நாட்டை கட்டி எழுப்பினான்
அது பார்ப்போர் வியக்கும் அழகிய வளம் கொழிக்கும்
நாடாக அமைய பாடு பட்டான்
தமிழ ஈழமும் அமைந்தது ஈரமும் வீரமும் நிறைந்தது
கடமை கண்ணியம் கட்டுப்பாடு என்ற கோட்பாட்டுக்குள் தமிழன்
தமிழ் தங்கச்சிமிழ் போலானது
தன்னிகரற்ற தனிப் பெரும் தமிழ்க் குடையின் கீழ் தமிழன்
இன்றும் என்றும் மறக்கவோ மறுக்கவோ முடியா ஆட்சி,
தமிழன் என்றால் தனித்துவம், தமிழ் என்றால் மகத்துவம்
தமிழ் கொடுத்தது தமிழனின் தற்பெருமையும், தன்மானமும்
இதுவே தமிழனின் தாரக மந்திரம் ,
ஆதியில் தோன்றி அழியா வரம்பெற்று வாழ்கின்றது தமிழ் .
தமிழே/ தங்கத் தமிழே/ எங்கள் நெஞ்சமெல்லாம் நீயே .

எழுதியவர் : பாத்திமாமலர் (21-Jun-19, 12:37 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 561

மேலே