பூவிலே வீசிய தென்றலுக்கு

பூவிலே வீசிய தென்றலுக்கு
புன்னகையில் நன்றி சொன்னது இதழ்கள் !
நீரிலே வீசிய தென்றலுக்கு
குளிர்ச்சியில் கைகுலுக்கியது நதி அலைகள் !
பாவிலே வீசிய என் மனத்தென்றலுக்கு
பார்வையிலே நன்றி சொன்னாய் நீ !

எழுதியவர் : கவின் சாரலன் (21-Jun-19, 6:59 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 40
மேலே