மனிதனுக்கொரு சேதி

மந்தையாக மாடுகளும்
மழை வெயிலுக்கு
மனிதனும் ஒதுங்கிய
மரங்களின்று இல்லை..

பள்ளிக்கூடமாய்ச்
செயல்பட்ட
பயன்மரங்களில் மனிதனின்
கொள்ளிக்கண்
பட்டுவிட்டது-
பட்டுப்போகுமுன்
வெட்டிவிட்டான் இவனே..

கரிக்காகக்
காட்டையே கொளுத்தும்
கருணையுள்ள மனிதன்,
மரம்நடு விழா நடத்த
மரத்தை வெட்டி
மைதானம் அமைக்கிறான்..

மரத்தை வெட்டிவிட்டு
மழைக்காக ஏங்குபவன்
மாறுவானா,
கூறுங்கள் அவனிடத்தில்-
வெட்டாதே மரத்தை,
வெட்டினால்
வேறுமரம் வை...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (21-Jun-19, 7:11 pm)
பார்வை : 101

மேலே