புணரும் தனிமை
அழும் போது தனிமையைத்
தேடுகிறேன் தனிமையின்
இருளில் நீ மறைந்திருப்பதைக்
கண்டு கை விளக்கை நீட்டினால்
நீ உன்னைப் புணர்ந்து
கொண்டிருந்தாய்
முகம் சுழிக்கும் என்னைக்
கண்டு முறுவலித்தாய்
பின் இருளில் இருந்து
ஒளிக்கு மாறினாய்
நான் அழுது கொண்டிருந்தேன்
தனிமையின் இருளில்