இஷ்டலிங்கம் வாக்கு
அய்யா, சோதிடரே உங்கு வாக்கு மெய்யாகிருச்சுங்க.
@@@@
யாரய்யா. இப்பத்தான் தூங்கி முழிச்சேன். நடு ராத்திரி வரைக்கும் சாதகத்தைத் தூக்கிட்டு சனங்க வர்றாங்க. நான் படுக்கைக்கு போனபோது மணி ரண்டு.
@@@@
அய்யா, நாந்தாங்க பரமசிவம்.
@@@@@
வாய்யா பரமசிவம். என்ன காலைல ஏழு மணிக்கே வந்திட்ட. நான் ஒம்பது மணிக்கு மேல தானே சாதகத்தையே கைல தொடுவேன்.
@@@@@@
அய்யா நான் சாதகம் பாக்க வரலீங்க. உங்கள பாராட்டத்தான் வந்தேனுங்க.
@@@@@
என்ன விசயம்னு சொல்லுய்யா?
@@@@
என் வயல் வரப்பு எல்லாம் வறட்சில வெடிச்சுக் கெடக்கு, எப்ப மழை வரும்னு உங்கிட்ட சாதகம் பாக்க வந்தேனுங்க. நீங்க "இன்னும் பத்து மணி நேரத்தில் மழை வரும்னு சொன்னீங்க. நான் எங்க ஊருக்குப் போயி இரவு சாப்பாட்டைச் சாப்பிட்டுட்டு இருக்கிறபோது சடச்சடனு மழை கொட்ட ஆரம்பிச்சிருங்க. விடிய விடிய மழை கொட்டுச்சுங்க. உங்க வாக்கு மெய்யாகிருச்சுங்க. அதச் சொல்லத்தான் வெடிஞ்சதும் பொறப்பட்டு வந்தேனுங்க. ரொம்ப நன்றிங்க.
@@@@@
பரமசிவம், இந்த சோதிடர் இஷ்டலிங்கம் வாக்கு என்னிக்கும் பொய்யானதில்லையா.
@@@@#
அதனாலதாங்க நெறைய சனங்க உங்களத் தேடி வர்றாங்க. நான் வர்றேனுங்க.
@@##
சரி. போயிட்டு வாய்யா.
@@@##
(பரமசிவம் போனபின் இஷ்டலிங்கம்::)
நான் முந்தா நாள் தொலைக்காட்சி வானிலை அறிவிப்பில சொன்ன செய்தியின் அடிப்படையில தான் மழை வரும்னு சொன்னேன். காக்கா உக்காரப் பனம்பழம் விழுந்த கதையா நேத்து மழை கொட்டிருக்கு. டேய் இஷ்டலிங்கம், பரமசிவம் மாதிரி முட்டாள்கள் இருக்கிற வரைக்கும் உங்காட்டுல ஆலங்கட்டி மழையே பெய்யும்டா.

