ஒரே கருத்தில் அமைந்த தமிழ் திரை இசை பாடல்கள் - 009

தமிழ் திரை இசை பாடல்கள் சில ஒரே மாதிரியான கருத்தோட அமைஞ்சுடுது
இதை திருட்டுனு சொல்ல முடியாது , ஆனா இந்த ஒற்றுமையை நீங்க கவனிக்காம போய் , இப்ப இத வாசிக்கிறது மூலமா கவனிக்குறீங்கனா அது ஒரு தனி அனுபவமா அமையும்னு நம்புறேன்.

அந்த காரணத்துக்காக எனக்கு தெரிஞ்ச பாடல்களை தொகுத்து எழுதி இருக்குறேன்.
உங்களுக்கு தெரிஞ்சதையும் சொல்லுங்க. நானும் தெரிஞ்சுகுறேன் , நன்றி

பாடல் 1 : எனக்கே எனக்கா நீ எனக்கே எனக்கா
படம் : ஜீன்ஸ்

ஒற்றைக் காலிலே பூக்கள் நிற்பது
உன் கூந்தலில் நின்றாடத்தான்
பூமாலையே பூச்சூடவா

---------------------------------------------------------------------

பாடல் 2 : வெள்ளி மலரே வெள்ளி மலரே
படம் : ஜோடி

வெள்ளி மலரே வெள்ளி மலரே…
வெள்ளி மலரே வெள்ளி மலரே
நேற்றுவரை நீ நெடுவனம் கண்டாய்
ஒற்றைக்காலில் உயரத்தில் நின்றாய்
மஞ்சள் மாலை மழையில் நனைந்தாய்
சித்திரை மாதம் வெயிலும் சுமந்தாய்
இத்தனை தவங்கள் ஏன்தான் செய்தாயோ
தேன் சிதறும் மன்மத மலரே என்றே சொல்வாயோ

இளந்தளிரே இளந்தளிரே வெள்ளி மலரன்று இயற்றிய தவம் எதற்கு
பெண்மங்கை உந்தன் கூங்தல் சேர்வதற்கு


இந்த ஒற்றை கால் ல பூ தவம் பன்னி காதலியோடு கூந்தல் வந்து சேருது அப்டீன்றது இந்த ரெண்டு பாடல் கள்ளயும் வர்ற ஒரு பொதுவான விஷயம்.
சுத்து சுத்துனு சுத்தி சுத்தி எழுதினாலும் அது தன் மைய கருத்து. ஆமா தானே ?

எழுதியவர் : (25-Jun-19, 12:50 pm)
சேர்த்தது : கிறுக்கன்
பார்வை : 247

சிறந்த கட்டுரைகள்

மேலே