கண்ணதாசக் கவி
கண்ணசவில் கவிதை பிறக்கும்.
காணாத கனவெல்லாம்
கண் முன் நிற்கும்.
சொல்லவரும் கருத்தெல்லாம்
சொக்கவைக்கும்.
தொடாத பொருளென்று ஏதுமுண்டா?
கொடுத்துச் சென்றதே
கோடான கோடி பெரும்.
கண்ணதாசக் கவியே,
வீசும் காற்றிலெல்லாம்
நீ வீதி வலம் வருகிறாய்.

