பனையும் தென்னையும்

பனையும் தென்னையும்
பார்க்க ஒன்று போல் தோன்றலாம்
பலன்கள் மட்டும் பல்வேறாய்

கீற்றாய் ஆகும் தென்னை ஓலை
விசிறியாய் மாறும் பனம் ஓலை
உண்மையின் நிலை தான் இது

தென்னையின் பாலை கயிறாய்
பனையின் பூ எரியும் கங்குவாய்
பழந்தமிழர் தொட்டு இரண்டும் பொதுவாய்

தென்னையில் காய் முற்றினாலும் காயே
பனையில் காய் முதிர்ந்தால் பழம்
எண்ணெயாகும் ஒன்று என்னவோ ஆகும் மற்றொன்று

ஈரம் வரும் போதெல்லாம் ஈனும் தென்னை
ஈறாறு மாதத்திற்கு ஒருமுறை ஈனும் பனை
இறை வழிப்பாட்டிற்கு கொடுப்பது தென்னையையே

தென்னையின் மட்டை மென்மையாய்
பனையின் மட்டை முட்கள் செறிந்ததாய்
இயற்கையால் வேலி என்றால் பலம் அதிகம்

இது போலே மனிதர்களின் மனமும் செயலும்
பார்வையால் நோக்கின் பலன் பம்மாத்து காட்டும்
நிகழ்வினால் மட்டுமே தீர்வு திடமாகுமே.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (26-Jun-19, 10:23 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 64

மேலே