காவிய கண்ணதாசன் கதம்பம்

போதையில் இருந்துக் கொண்டே - பல
போதனைகள் கொடுத்தவனே
பாதை மாறும் மாந்தர்களை - நல்ல
பாதையில் இட்டுச் சென்றவனே

பல காலம் இறை பாதை மாறி
நாத்திகத்தில் திளைத்தவனே
உன் இதய மாற்றமே - தமிழ்
இலக்கியத்திற்கு பெரும் ஏற்றமே

நீ தெளித்த வார்த்தை யாவும்
நீண்ட தெளிவைக் கொடுத்தது
நெஞ்சினுள் மஞ்சமிட்டு
நீங்காமல் நின்றது

சிறு கூடல்பட்டியில் பிறந்து வந்து
பெரும் தமிழ்நாட்டை ஆண்டவனே
தமிழெழுத்து உள்ளவரை - உன்
தமிழ் பாட்டு ஆளும் ஐயா.
--- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (26-Jun-19, 9:12 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 106

மேலே