தொலைந்தவர்கள்

தொலைந்தவர்கள்..
=====================
(உணர்வுகள்)

ஒருவாரமாக ஊர்த் தொடக்கச் சாலையையேப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவருக்கு சொந்த ஊரிலிருந்து பணிமாற்றம் கிடைத்து இன்றோடு பதினைந்து நாட்கள் ஆகின்றன..

காலம் மாறிக்கொண்டே வருகிறது..
இனி இந்த ஊரில் .. எதுவும் இல்லை என
அக்கம்பக்கத்து வீடுகளிலிருந்து இரவல்
கேட்கின்ற நிலமை அழிந்துவருகிறது..
அரசு உத்தியோகஸ்த்தனின் மனைவி என்னும் வெறும் அந்தஸ்த்தைத் தவிற என்னிடம் சொல்லிக் கொள்ளும் ஏதுமில்லை..

விறகடுப்பில் சமைத்துக் கொண்டிருக்கும் என்னிடம் வந்து ... அம்மா நா கார்த்திக் வீட்டுக்குப் போயிருந்தேன், நுழைவாயிலுக்கு இடபுறம்‌ அடுமனை இருக்கு அங்க எரிவாயூ சிலின்டரும் அடுப்பும் இருக்கு.. வாயிற்கு வலப்புறத்தில் பெரிய அறையில் தொலைக்காட்சிப் பெட்டி இருக்கு.. நா கீழ தரையில உக்காந்தேன்.. என்னை அவங்க பெஞ்சில உக்காரச்சொன்னாங்க .. அது எனக்கு பெருமையா இருந்துச்சு... அப்போ ஒரு டீவீயும் கியாஸும் வாங்கினா நம்மளும்
பணக்காரங்கதானே ம்மா "" என்றுக் கேட்கும் பைய்யனிடம் எதைச் சொல்வது ..

இதோ இரண்டுவாரம் ஃபர்னிச்சர் காரனிடம் வாங்கிய புதுக்கட்டிலுக்கும் டீபாயிற்கும்
தவணைக் கொடுக்காமல் ஒளிந்துகொண்டேன்.. ஊரிலிருந்து போகும் முன்பேனும் கொடுத்துவிட்டுப் போயிடணும்..
கூலிவேலை செய்யும் கலாவின் வீட்டில்
பெட்டி நிறைய ரேஷன் பொருட்களும்
கோதுமை மாவும் .. ராகி மாவும் இருக்கு ..
பழைய பாக்கி நாலு படி ராகி மாவும் .. ரெண்டுபடி கோதுமை மாவும் கொடுக்காம இருக்கு.. இப்போல்லாம் கடந்துபோறவ முன்னபோல நல்லா இருக்கியான்னும் கேக்குறதில்ல ..

இன்னைக்கும் பொழுது சாஞ்சாச்சி .. லாரிக் கொண்டு வருகிறேன்
சாமான்களைக் கட்டி வைத்திரு என்றுச் சொன்னவர் .. வரவில்லை ...

அதுவழிப்போன..
வாணி அக்காவும் சாந்தி அக்காவும் நா மந்தக்கல்லில் உக்காந்துகிட்டு ஆலமரத்தைப் பார்ப்பதை கவனித்துவிட்டு .. என்ன கெளசி உங்கப்பா இன்னைக்கும் உங்களை ஏமாத்திட்டாரா ன்னு கேட்டு சிரிச்சிட்டுப் போறாங்கம்மா ன்னு மகள் சொல்லும் அவளுடைய முதல் ஏளனம்.. ஆம்‌ அவளுக்கு அது முதல் ஏளனம் தானே .. இதுநாள் வரை ஏதும் தெரியாமல் தானே மறைத்திருக்கிறேன் ... எவ்வளவு நாள் பிடித்துவைக்க முடியும் .. என் முகமும் கண்களும் ஏன் இப்போதெல்லாம் அப்பட்டமாய் என் நிலையைக் காட்டிக் கொடுக்கிறது .. இனி இது நீளும் முன்பாவது
இந்த ஊரிலிருந்து போயிவிட மாட்டோமா..

குடிகாரன் என்பதால் அவர் உடன் பிறந்தவர்கள் முன்னிலையிலும் கேவலப்பட்டுவிட்டோம்... உதாசீனப் படுத்தப் பட்டோம்..

யோசனையில் தூறிய மழையில் அப்படியே உக்காந்துவிட்டாள் திரெளபதி..
சட்டென்று குளிர்ச்சி உணர்த்தியபோது
குறைந்தே இருந்த விறகுகள் மழையில் நனைந்திருந்தன ... திரி அடுப்பில் மண்ணெண்ணெய் இல்லை .. முந்தானையை தலையில் கவிழ்த்தபடி வாசலில் நின்றவளுக்கு எப்பக்கம் போக என யோசித்து நின்றப் பொழுதே மழையும் காற்றும் சூராவளி எடுத்தன.‌.குழந்தைகள் பசியோடுக் காத்திருந்தார்கள்.. இடி முழக்கத்தில் மின்சாரம் அணைந்திற்று.. உடைந்த கதவை சமன் செய்து அடைத்தவள் .. சிம்மிளிப் புறகில்
காய்ந்தெரிந்த துண்டு விறகுகளின் மிச்சமுள்ளதா என இருட்டில் துழாவுகிறாள் ..
சிம்மிளி வழியே ஒழுகிய மழை நீரில்
விறகுக் கரிகள் நனைந்திருந்தன ..

செய்வதறியாமல்.. இருட்டிலேயே அவள் நிலையை யோசித்து அமர்ந்துவிட்டாள்

குழந்தைகள் பசி மயக்கத்தில் உறிங்கிவிட்டிருந்தார்கள் ..

மெதுவாக தன்னைத் தேற்றிக் கொண்டவள்
செவுற்றுக் காரையைத் தழுவிக் கொண்டே குழந்தைகளிடம் சென்று அங்கங்கே எனக் கிழிந்த போர்வைக்குள் தஞ்சம் புகுகிறாள் ..

பெண் உறக்கத்தில் முனங்குகிறாள்..
ஒருக்கைய்யால் மகளின் கால்களை நீவுகிறவளுக்கு .. மகளின் கிழிசல் பள்ளிச் சீருடை விரல்களுள் அகப்படுகிறது .. அந்நொடி அவளை அழச்சொன்னது
..பைய்யனின் வெற்று வயிற்றிலிருந்து பசிச் சத்தம் காது உணர்த்தியது .. அவன் வயிற்றைத் தழுவிக் கொடுக்கிறாள் ..

"நாங்கள் யார் என்பதைத் துலக்க வேண்டாம்
நாங்கள் சொல்வதையும் துலக்கவேண்டாம்"

""எங்களை அலசி அலசி அவர்கள் தரும் ஒவ்வொரு ஆறுதலிற்குப் பின்னாலும்
நாங்கள் கோணிக்கயிறுகளென ஊசிக் குத்துதலின் பெயரால் பின்னப் பட்டிருக்கிறோம் .. சாக்குப் பைகளாய் ஒரு பருவமழைக் காலத்தில்
அவர்களுடைய துர் உணர்வுகளுக்கு
ஏளனப் பாகையாய், கூனிக் குறுகி துணை இருந்திருக்கிறோம் ..""

எங்களை நீங்கள் அறியும் முன் இங்கிருந்து
தொலைந்துவிடுகிறோம் .. வாழ்ந்திருப்போம்
என்னும் வைராக்கியத்தில் முளைத் தெழுந்த நாங்கள் யாரென்று .. நீங்களும் அவர்களைப்
போல் எங்களை அலசி.. ஏதுமற்றவர்கள் எனத் தூற்ற வேண்டாம்" .. தொலைந்துவிடுகிறோம் .. இனி
தொலைந்துவிடுகிறோம்..

தொடர்கிறேன் ... (டைரியில்)

எழுதியவர் : அனுசரன் (27-Jun-19, 2:18 am)
பார்வை : 163

மேலே