எதிர்மறை விளைவு

சுட்டெரிக்கும் பனிக்கால குளிர்
உறையவைக்கும் கோடையின் வெயில்
உறங்கியதோ அலையின் ஆட்டம்
பகல் இரவானது இரவு பகலானது
சூரியன் திசை மறந்தானோ?
நிலவும் தகிப்பதேனோ?
சுற்றும் மனிதர் உணராது
பற்றும் மனதும் குறையாது
வெற்றுணர்வுடன் ஜடமாக
முற்றும் துறந்த மதிகொண்டே
அலைந்தொழியும் ஜடமாக
தலைவியின் நினைப்பாலே.

எழுதியவர் : கிருஷ்ணமூர்த்தி து (27-Jun-19, 6:50 am)
Tanglish : ethirmarai vilaivu
பார்வை : 56

மேலே