கொள்ளை

அள்ளிக்கொடுக்கிறான் சம்பளம்
அமெரிக்காவில்..

கொள்ளி போடக்கூட
பிள்ளை வராத கொடுமை,
அள்ளிப்போட உள்ளூரில்
ஆள்பார்க்கும் அவலம்..

வெள்ளிப் பணத்தின் முன்னே
கொள்ளைபோகும் பந்தம்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (27-Jun-19, 7:16 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 80

மேலே