கனவுகள் எரிகிறதே
அன்பே
கருப்பு இருட்டினிலே
கண்ணாடி கண்களால்
நெஞ்சை கிழித்தவளே -- இன்று
தன்னால் தனிமையில்
நான் பேசி சிரிக்க
ஊரெல்லாம் உன்னை தூற்றுகிறதே!!
வெள்ளை நிலவது
தலைமேல் காவல்
காத்திருந்த வேளையிலும்
மஞ்சள் முகத்தில் பூத்திருந்த
மைவிழியில் நான் மதிமயங்கி போனேனே!!
இருளுக்குள் எத்தனை ஒளியென்று
என்னுள் கேள்வி கேட்டுக் கொண்டு
ஏகாந்தத்தோடு கைக்கோர்க்க துணிந்தேனே
புழுதிக் காட்டுக்குள்ளே
பூச்சூடி நின்றவளே! நிமிர்ந்து
உன்னை நிதானமாக பார்க்கும் முன்னே
மூச்சுக்காற்றினை பறித்து
முந்தானையில் முடிந்துக்கொண்டாயே!!
காலை உதித்த கதிரவன்
மாலை மயக்கத்தில்
கார்முகிலில் காணமல் தொலைந்த போதும்
கண்களால் நீ பற்ற வைத்த தீயில்
என் கனவுகள் எரிகிறதே...!!