இரவு

மேனிக்கூட்டில் வேதனைப் பூட்டு
சிறை வைத்த மனதினை
மீட்டெடுக்க வந்ததோ இந்த இரவு!
வெண்ணிலவு பொழியும்
அமுத ஒளியில்
வேதனைப் பூட்டு உடைந்தது!
மழலை போல் தவழும்
மேகக்கூட்டங்களில்
மேனிக் கூடு மிதந்தது!
பரந்த வானில் சிதறிக் கிடக்கும்
விண்மீன்களைப் பறிக்க
சிறைப்பட்ட மனமோ
சிறகடித்துப் பறந்துவிட்டது!!

எழுதியவர் : சுவாதி (28-Jun-19, 2:34 pm)
சேர்த்தது : சுவாதி
Tanglish : iravu
பார்வை : 171

மேலே