இயற்கை அத்துமீறல்கள்

மாநகருக்குள் ஏரிகள்
சில மிகப்பெரியவை, சில சிறியவை
மற்றும் பல குட்டைகள் மிகவும் சிறியவை
கோயில்களின் திருக்குளங்கள், புனித தீர்த்தங்கள்
பெரிய ஏரிகளுக்கு எங்கிருந்தோ ஏரியை
வந்தடையும் நீரோடைகள் நீரின் ஆதாரம்
நீரோடைகள் பாதையில் வெத்து நிலங்கள்
அத்தனையும் புதியதாய் நகரில் குடியேறும்
மக்களுக்கு அடுக்கு மாடி கட்டிடங்கள்
ஓடைகள் போக்கு அடைபட ஓடைகள்
காணாமல் போக ஏரிகளும் மாயமாய்ப்போயின
எதிர்பாரா பேய் மலை வந்து தாக்க
நகரமே போக்கு தெரியா மழை நீர் வெள்ளத்தில்,
ஓடையில் ஒய்யாரமாய் ஓதவேண்டிய மழை நீர்
வழி தெரியாது தவித்து வெள்ளமாய் வானை நோக்கி.

கட்டிடங்கள் உள்ளேயும் வெள்ள நீர்
மக்கள் உயிர்ச்சேதம், பண்டங்கள் சேதம்
கட்டிடங்கள் சேதம் இன்னும் எத்தனையோ
ஏன் இந்த அவளை நிலை …..
மனிதன் இயற்கையோடு தொடுக்கும்
அத்துமீறல்கள் …….

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (28-Jun-19, 2:03 pm)
பார்வை : 263

மேலே