தீராத விளையாட்டுப் பிள்ளை

கார்வண்ணன் ஒருநாள்
ஒரு மணிநேரம்
கருணை கொண்டான் களிகூர
எம்மை வைத்தான்
மீண்டும் காதோரம் சொன்னான்
வருவேன் வருவேன் நானென்று
இனி அவன் ஏறக் கட்டிவிட்டான்
ஈரமேனும் நீரை
ஏங்கித்தான் அண்ணார்ந்து
பார்க்கின்றோம்
எப்போ எப்போ வரும் மழை என்று
தாகம் கொண்ட பூமியில்
தணியாத தாகம்
ஏன் இந்த கர்வம் கருமேகம் உனக்கு
எங்கள் பூமியில் எமக்காய் இருந்த நீரை
உன் கருவாயால் உறுஞ்சி உறுஞ்சி நீ
எட்டாத உயரத்தில் கூட்டம் கூட்டமாய்
உல்லாசமாய் உலவுகின்றாய்
உன்னை நங்கள் வேடிக்கை பார்ப்பது
வாடிக்கையாகி விட்டது
இருந்தும் உனக்கு இது விளையாட்டு
எமக்கு இது போராட்டமே,
கருமேக கண்ணா கண்ணாம்பூச்சி ஆடிட
நேரமில்லை எமக்கு ,
எங்கள் தாகம் தீர்க்க மேகம் நீ
உன்னால் மட்டும் முடியும் .
கார்மேக கண்ணனே நீயொரு வள்ளல்
கொடுக்க கொடுக்க வற்றாது உன் வளம்
நீ வாரியிறைக்க தொடங்கி விட்டால்
உன்னை தடுக்க யாருண்டு
வண்ணனே கருமேக கண்ணனே
வாழ்த்துகிறோம் உன்னை வழங்கிவிடு
நீரை உலகும் மக்களும் சிறக்க

எழுதியவர் : பாத்திமாமலர் (28-Jun-19, 12:36 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
பார்வை : 68

மேலே