வாராரு வாராரு அத்தி வரதர்

வாராரு வாராரு அத்தி வரதர்
அத்தி மலர் பூத்ததைப் போல் புத்தம் புதுசாய்
சித்தமது மகிழ்ந்திட அச்சு அசலாய்

நெடுஞ்சாணாய் படுத்து நீளத்துயின்று
நெடுங்காலம் தண்ணீரை ஆண்டு வந்த
நீலவண்ண வரதன் நம்மை காண வருகிறார்

சந்தனம் சவ்வாது அத்தர் தெளித்து
சந்தானம் பெருகிடவே மொத்த மாந்தரும்
சலிக்காமல் வரதனை வேண்டி மகிழ்வோம்

அரிதான இந்நிகழ்வு அரங்கேறும் நாளில்
அகலாது கண்களால் கண்டு களிப்போம்
அடுத்து வரும் நாற்பதாண்டை கடந்து வாழ
அரியான அத்திவரதனை வேண்டிக் கொள்ளுவோம்.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (30-Jun-19, 1:08 pm)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 249

மேலே