குழந்தைப்பருவம்
தேய்ந்திட்ட பென்சீலின் முனையில்.....சாய்ந்திட்ட என் எழுத்துக்களால்......நாளைய சமுகத்தில் சரித்திரம் படைக்க துடிக்கும் எம் குழந்தைப்பருவம்!! களையாத எம் சீருடையில்.....விளையாட்டில் கிடைத்த விருதாய்......கார்முகில் வண்ணத்தோடு கறைகள் பலவற்றுடன் நாட்கள் பல கடந்துச் செல்லும் எம் குழந்தைப்பருவம்!!! ஊரினுள் பல பிரிவினையோடு இருப்பினும்......பள்ளியினுள் உள்ளத்தோடு இணைந்து......நல்உறவோடு சமத்துவத்தை பறிமாறிக்கொள்ளும் எம் குழந்தைப்பருவம்!! அள்ளியெடுத்திட்ட சோற்றின் பிடியில்.....சிதறிய துகள்கள்யாவும் பூச்சியினங்களுக்கே.....என்ற புரிதலை உணர்த்திய எம் குழந்தைப்பருவம்!! கரும்பலகையில் தம்மை கரைத்துக் கொண்டு.....எதிர்வரும் காலங்காலகிய எங்களையொல்லாம் வடிவமைக்கும் சிற்பிகள் எம் ஆசிரியர் பெருந்தகைகள் என்பதனை புரியவைத்திட்ட எம் குழந்தைப்பருவம்!! எம் வாழ்வியலின் மாற்றமே.....தம் வாழ்க்கையின் சாதனையாக எண்ணி...தினம் தினம் கடின உழைப்பால் தம் ஆயுளை அழித்த கொண்டிருக்கும் ஜீவன்கள் தாய் மற்றும் தந்தை என்பதனை அறிந்திட்ட எம் குழந்தைப்பருவம்!!!