கண்மணியே -------------------------கவிதை
புன்னகை சிந்தும் பிஞ்சிதழை
புணர்ச்சியில் சிதைத்து முத்தமா?
பட்டுப்போன்ற கைவிரல்களை இறுக்கமாய்
பற்றி உடைப்பது காமமா?
மெல்லிய மேனியில் வெந்நீர்
ஊற்றினாலே அய்யோவென அலறும்
மழலை அவள் யோனியில்
மோக வெப்பத்தின் விந்தினை
தறுதலையொன்று பீச்சுவது மனிதமா?
பால்குடி மறவா குழவியின்
முதிரா கொங்கைகளை பிசைந்து
முகருவது தான் இன்பமா?
உயிர்வலியறியா காம பிண்டத்தின்
பெயரது ஆண்மகனா?!
பசிக்கு அழுதாலே தாய் மனம்
துடித்திடுமே மரணவலியை
மொட்டது எதிர்க்கொண்ட
நொடி எப்படி துடித்ததோ?
பொன் மகளே தளிர் மேனி
துவண்டதோ? அரண்டு
அழுதனையோ? அடிவயிற்றில்
தாய்க்கு உள்ளிருந்து நீ
உதைத்த மணித்துளிகள்
கூட மறந்திருக்காதே,
அதற்குள் மண்ணுக்குள் உனை
புதைக்க காலமது வந்ததே;
என்னென்ன வேதனைகளை
பிஞ்சு உள்ளம் கண்டிருக்கும்?
இந்த பாழும் தரணி
பாவை மகளுக்கு பாடை
கட்டி அனுப்பியதே;
நீதியும் அறமும்
கொன்று போடாதோ
பிண்டங்களை?
காலம் உள்ளளவும் வேதனைத்
துளிகளை கடப்பது இயலாதே
உன் கல்லறை பூக்களும்
உதிரத் துளிகளை
வடிக்கின்றதே கண்மணியே!
(2019 ஜுன் 19 தெலுங்கானாவில் 9 மாத பெண்
குழந்தை 25 வயது ஆண் கயவனால் வன்புணரப்பட்டு கொல்லப்பட்டபோது துடித்து எழுதியது)
Share