தம்பி பாப்பா வேணுமே

அக்கா அக்கா சின்னக்கா
சிரிப்பு மழை முத்தக்கா
வறுத்த மீனு தின்னக்கா
வயிறு உப்ப சிரியக்கா.

மாமா பேச்சக் கேளக்கா
தம்பி பாப்பா வேணுக்கா.
எப்ப தர்ர சொல்லக்கா.
என்னைப் போல வேணுக்கா.

கண்ணாமூச்சி ஆட நான்
காத்து இருக்கேன் கருப்பக்கா
சேத்து வைச்ச சோருகூட
காத்து இருக்கு செல்லக்கா.

அக்கா அக்கா சின்னக்கா
வேத்து ஆளு இல்லக்கா
பாத்து மனசு வையக்கா..
மாமா பேச்சை கேளக்கா!!

எழுதியவர் : கவிஞர் சு. இராமஜோதி (2-Jul-19, 5:57 pm)
சேர்த்தது : ராமஜோதி சு
பார்வை : 49

சிறந்த கவிதைகள்

மேலே