பெண்மைக்கோர் வழிவிடு
யதார்த்தங்களின் நித்திரைக்குள் தொலைக்கப்பட்ட பெற்றொரின் அச்சங்கள்.., சிறகொடிந்தும் கனாச்சித்திர புல்வெளிக்குள் இடறிக்கிடக்கும் பெணமையின் கனவுகள்...
பெண்ணிற்கென இழைக்கப்பட்ட அநீதிகள் இன்று சாதிக்க எண்ணும் பெண்ணின் ஆசைக்கனவுகளின் ஆரம்பப் புள்ளிகள் ஒவ்வோர் வீட்டின் அறைகளுக்குள் கண்ணீராய்.., இருளில் கரைந்து போகிறது..!
பெண்மைக்கான சுதந்திரம் பாரதியின் கனவோடு பகல்கனவாய் பரிநமித்துப் போனது..!
உரக்க கத்தி அழ நினைக்கும் பதிவுகள் எல்லாம் இரவுநேர வேளையிலும், தலையணை தாங்கிக் கொள்ளப்பட்ட மௌனியங்களாய்..!
பெண்மைக்கோர் வழிவிடுங்கள்.., ஆண்வர்க்கத்தின் பாவத்தால் சிதிலங்களாய் சிதைக்கப்பட்ட
பெண்ணியத்தின் சாதிக்க நினைத்த தடயங்களின் தாரைகள்..
ஆணிணமே உன்னால் அச்சப்பட்டு தன் மகள்களை காக்க நினைக்கும் ஒவ்வோர் பெற்றோரின் மனவேதனையும்.., வீட்டிற்குள் புதைக்கப்பட்ட பெண்மையின் கருகிப் போன கனவுச்சிறகுகளின் வேதனைகளில் காணப்பட்ட வலிகளும் உன் ஆனந்தம் என்றால் மனிதம் மரணித்துப் போகவில்லை.., அகராதியில் மனிதத்தின் பொருள் தான் தற்கொலை செய்து கொண்டன..!