நாடக மேடை

நவரசங்கள் காட்டும் உந்தன் கண்களில்
பெண்ணே ஒரு நாடக மேடையன்றோ
காண்கின்றேன் நான் - மூடி திறக்கும்
இமைகள் உந்தன் கண்களெனும் மேடைக்கு
திரைசீலை, நீ இமைகள் மூடி திறக்க
மேடையாம் உந்தன் கண்களின் விழிகள்
நவரசம் காட்டுதடி , பேசும் பூவிழியாய்
சிரிக்கும் கண்மணிகளாய் ,பார்வையில்
இதோ அன்பு காட்டி, என்மீது கோபம் கொள்ள
வேலின் கூர்மையும் காட்டி, என்மீது காதல்
பெறுக சரசமும் ஆடுதடி உந்தன் கோலவிழிகள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Jul-19, 6:25 pm)
Tanglish : naadaga medai
பார்வை : 54

மேலே