என்னைத் தெரியுமா
உடலெங்கும்
பல புண்களை சுமந்தேன்...
என் உடல் கொண்ட
காயங்கள் எல்லாம்
உங்கள் மனக் காயங்களுக்கு
மருந்தாகி சுகம் தரும்...
என் காயங்களின் வழி வெளியாகும் என் வேதனை
உங்கள் இதயங்களை வருடி
விழிகளை சொக்க வைத்து விடும்...
நான் இறைத்தூதரும் அல்ல...
பெரிய மருத்துவனும் அல்ல...
ஆனால் எனக்கும் கொஞ்சம் ஆற்றல் இருக்கிறது!
என் பெயர்...
புல்லாங்குழல்!
தமிழ் தீக்குச்சி.