மனதிற்கும் உயிருக்கும் நடுவில்

மனமே ஒரு நாள் நீ மட்டும் பிணமாகு
உடல் மட்டும் இயங்கட்டும் உணர்வோடு

வருவதை எதிர்க்கட்டும் உடல் திறனோடு
இழப்புகள் ஏதும் தங்காது மனதோடு

மனதாலே உடல் அடைகிறது பெருங்கேடு
உடல் இன்பம் பெறுவதே மனதின் துணையோடு

மனதிற்கும் உயிருக்கும் நடுவில் ஒரு கோடு
மனமின்றி நாம் இயங்குவோமா நினைவோடு

தினந்தினம் மனமே படுது பெரும் பாடு
மனம் என்றும் வாழ வேண்டும் உடல் எனும் கூடு

மாய மனதிற்கு எங்கும் இல்லை ஓர் உருவு
மாயங்கள் பல செய்யும் மனம் என்பதை நீ உணரு.
---- நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Jul-19, 8:20 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 63

மேலே