மனதில் காதல் திசுக்களை

பகலில் வந்து என்னைப்
பரவசப்படுத்திய நிலவே

பளிச்சென்ற சிரிப்பால் - நெஞ்சில்
சிலிர்ப்பைத் தந்தவளே

கண்ட நினைப்போடு வளர்ந்த மனதில்
காதல் திசுக்களை செலுத்தியவளே

கார் கால மழையாட்டம் - காதலால்
கடுங்குளிர்ச்சி தந்தவளே

என்னிடம் உள்ள காகித காசும்
மணக்குதடி உனைக்கண்டப் பின்

இன்று போல் என்றும் என் மனம் இருக்க
மனதினுள் நின்று நீ மறுமலர்ச்சி தருவாயோ
- - -நன்னாடன்.

எழுதியவர் : நன்னாடன் (3-Jul-19, 10:31 am)
சேர்த்தது : நன்னாடன்
பார்வை : 77

மேலே