பெண்மை🍁🌺🌹
பெண்மையே உன்னை எழுத
ஆண்மைதான் தகுதி நீ சான்றுதல்
தந்தால் மட்டுமே....
உன்னை புரட்டிப் பார்த்து விட்டு
என் சிந்தனை இளைப்பாறுகிறது
எந்தக் கோணத்தில் உன்னை எழுத்தால்
செதுக்குவதன்று...
"பெண்மையை தன்மையாக தாய்மையில்
தாலாட்டிப் பார்க்கிறேன் வரிகள் உறங்கிக்
கொள்கிறது..."
"சரி பெண்மையை மனைவியின் கருத்தாவாக புகுத்திப் பார்க்கிறேன் தொடக்கப் புள்ளியே
தொடுவானம் தொடுகிறது..."
"பெண்மையை மகளாக மொழிகளால்
பதித்து தக்கவைக்கப் பார்க்கிறேன்
ஏனோ கோணம் கோணலாகிறது"
"பெண்மையை தங்கையாக கவிக்களிப்பால் சீராட்டிப் பார்க்கிறேன் அதன் அமைப்பு அங்கலாய்க்கிறது "
"சரிஅதன் ஒட்டுமொத்த கோலத்தையும்
ஒரே மைய்யத்தில் சேர்த்து வைத்தாவது
கோர்ப்போம் என்றால்.....
அதன் உள்ளுணர் பகுதிகள்
பல யுகம் போய் வரச் சொல்கிறது..."
"ஒரு ஆண்மகனாக பெண்மையை
பூக்கவைக்க பல்லாண்டு காலம்
பயணிக்க வேண்டும் என்று
இதோ.......
விடைபெறுகிறேன்