மகள் மாவல் -- மகன் தவல்

வடக்க போயி வாழ்ந்திட்டு இருக்கிற வஞ்சிக்கோடியே,
பத்தாண்டு கழித்துத்தான் நம்ம ஊர் ஞாபகம் வந்ததா உனக்கு?
@@#@@@
ஆமாம் பாட்டி என்னருமைப் பாட்டி
அழகான பொண்ணையும் அழகான பையனும் இரட்டையராய் பிறந்தனர்!
அவர்களுக்கு இப்போ எட்டு வயது ஆகுது!
@@#@@@
தமிழர்களே தமிழ்ப் பெயர்களைப் புறக்கணிக்கும் காலம்
வடக்கே இந்திப் பேசும் பகுதியில் வாழ்கின்ற நீயா
பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்டியிருப்பாய்?
@@@@@
எனதருமைத் தமிழ் நாடே இந்திப் பெயர் மோகத்தில் திளைக்கும் போது
வடக்கே வாழும் எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு பெத்த பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயர்களைச் சூட்ட?
@@@@@
வஞ்சிக்கோடி நீ சொல்வதும் சரிதான்டி பெண்ணே!
செவச்செவனு இருக்திற உன் மகன் பெயர் என்னடி?
@@@@@
அழகான எனது பையன் பெயர் 'தவல்'.
@@@@@
என்னடி பேரு இது? தவில் இசைக் கருவி. 'தாவல்'உம் உண்டு அரசியல்வாதிகளுக்கு. அழகான பையன் 'தவல்' ஆகிப் போனான்.
பேரழகிச் செல்லம் என் கொள்ளுப் பேத்தியின் பெயர் என்னடி?
@@@@@#
சொல்கிறேன் பாட்டி, சொல்கிறேன்.
உன் அழகுச் செல்லம் கொள்ளுப் பேத்தியும் நல்ல சிவப்பு நிறம் தான்.
அவள் பெயர் 'மாவல்'.
@@@@@
மாவலுக்கு காவலனாய் எவன் மணாளன் ஆகப் போறானோ?
எந்தப் பெயராய் இருந்தால் என்ன?
என் செல்லங்கள் இரண்டும் செல்வாக்குடன் வாழ வாழ்த்துகிறேன். தமிழரின் தனிப்பெரும் கடவுள் அந்த திருமுருகன் அருள் புரிவான்!
■■■■■■■■■■■■■■■■■■■■■■■★★★★★★★★★★★★★★★■■■
Dhaval = fair complexioned.
Maval = garland.
********************************************

எழுதியவர் : மலர் (6-Jul-19, 8:44 am)
சேர்த்தது : மலர்1991 -
பார்வை : 110

மேலே