என் காதலிக்கு பிடித்ததெல்லாம்.........

என் காதலிக்கு தெரிந்ததெல்லாம்
எனக்குத் தெரியவில்லை.ஏனென்றால்,
எனக்கு காதலிக்கவே தெரியவில்லை.

என் காதலிக்கு பிடித்ததெல்லாம்
எனக்குத் தெரியவில்லை.ஏனென்றால்,
என்னையே அவளுக்கு பிடிக்கவில்லை.

என் காதலிக்கு பிடித்ததெல்லாம்
அவள் காதலனுக்கு தெரிந்திருக்கிறது.
ஏனென்றால், அவளுக்கு
அவனைமட்டுமே தெரிந்திருக்கிறது.

என் காதலியின் மகிழ்விற்காக
நானெதுவும் செய்வேன். அவளோ,
அவளின் காதலுக்காக எதுவும் செய்வாள்.

இத்தனை எதிர்ப்பதமேன்?
என்னை காதலனாக நினைக்கும்
ஒருத்தியை, இதுவரை நான்
காணாதிருப்பதனால் .....

எழுதியவர் : வென்றான் (7-Sep-11, 10:33 am)
சேர்த்தது : வாகை வென்றான்
பார்வை : 449

மேலே