காதல்

உன் வேல்விழிப் பார்வை
என் மீது பட்டு என்னைக்
கட்டிப்போட்டு விட்டதடி
அன்று மேகநாதன் விடுத்த
பிரம்மாஸ்திரம் அனுமனை
இலங்கையில் கட்டிப்போட்டதுபோல்,
உந்தன் பேரழகில் , உந்தன்
கோலவிழிப் பார்வையில் மயங்கினான்
என் வயமிழந்து செயலிழந்து என்னையே
உன் பார்வைக்கு காணிக்கையை தந்து
உன் காதலில் நீ என்மீது கொண்ட காதலுக்கு
கட்டுண்டு கிடக்கிறேன், நீ அறிவாய்,
நீ வந்து என்னை அணைத்தால் இந்த
கட்டிலிருந்து விடுபடுவேனடி உந்தன்
ஆருயிர்க் காதலனாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (11-Jul-19, 8:58 pm)
Tanglish : kaadhal
பார்வை : 178

மேலே